வன்னியர் பகுதிகளில் திமுக செல்வாக்கு உயர்கிறது!


தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சுமார் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் வன்னியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். குறிப்பாக சில தொகுதிகளில் 40 சதவீதம் சில தொகுதிகளில் 60 சதவீதம் என்ற அளவில் அடர்த்தியான வாக்கு வங்கியை வன்னியர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் உள்ளனர். இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தி பிடித்து வந்த வன்னியர் வாக்கு வங்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் குறைந்ததினால் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. அதே நேரம் சில மாவட்டங்களில் திமுகவின் வன்னியர் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டார்கள். இதே போன்று 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38 தொகுதிகளில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் வெற்றிப்பெற்றுள்ளார்கள். இதில் 20-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுகவின் செயல்பாடுகள் வன்னியர்களுக்கு வன்னியர் வாக்குகளை ஈர்க்கின்ற அளவிற்கு பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் கட்சியின் தலைமை மீது ஒருவிதமான அதிருப்தியே நிலவி வந்தது. ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு எந்தவித நன்மையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை என்ற குறை அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக அரசு பணியாளர் தேர்வு வாரியம் உறுப்பினர் நியமனம், மற்றும் பல்கலை கழகங்களில் துணைவேந்தர் நியமனம், நீதிமன்றத்தில் நேரடி நியமனத்தின் மூலம் நியமிக்கப்படும் நீதிபதிகள் நியமனம் போன்றவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் இதனை வன்னியர்களாக உள்ள வன்னிய அமைச்சர்கள் தட்டிக்கேட்டபதில்லை அதிகளவில் வன்னியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதுமட்டும் அல்ல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக கட்சியும் முதல்வர் எடப்பாடியிடம் அழுத்தம் கொடுத்து வன்னியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என்றும் பாமகவின் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அரசு காதுகொடுத்து கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வன்னியர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக பாமக கட்சி கடந்த ஒரு வார காலமாக மாநிலம் தழுவிய அளவில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் முதல்வர் எடப்பாடி அரசு பாமக கட்சியின் கோரிக்கையை கிடப்பில் போடுகின்ற விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து அறிவிப்பினை வெளியிட்டு பாமகவின் கோரிக்கையின் போராட்டத்தையும், வன்னியர்களின் விருப்பத்திற்கு மாறாகவும் நடவடிக்கை எடுத்து அறிவித்துவிட்டார். இதனால் கடும் கோபத்தில் உள்ள வன்னியர்களும் பல்வேறு வன்னிய சங்கங்களும் அதிமுகவிற்கு எதிராக கிளந்து எழுந்து உள்ள நிலையில் திமுகவிற்கு கவும் செயல்பட தொடங்கிவிட்டார்கள். இதனால் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வன்னியர் பகுதிகளான நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் அதிமுக கழகத்திற்கு வன்னியர் பகுதிகளில் கடும் தோல்விகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி இரண்டு மாவட்டங்களில் மட்டுமே அதிமுகவிற்கு ஆதரவு நிலை இருந்து வருகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தல் முடிவு என்பது திமுக வேட்பாளர்களுக்கு அதிகளவில் வன்னியர் பகுதிகளில் வெற்றி வாய்ப்பை ஈட்டிதரும் என்பதை தெளிவாக வாக்காளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதிமுக வன்னியர் பகுதிகளில் அதிகளவில் தோல்வியை சந்திக்கும் என்றும் கூறுகிறார்கள். திமுகவிற்கு ஆதரவாக வன்னியர்கள் வாக்குகளும் தலித் வாக்குகளும், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் வாக்குகளும் கணிசமாக பதிவாகும் என்பது தெளிவாக தெரிகிறது. மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரது பிரச்சாரங்களும் திமுகவின் வாக்கு வங்கியை ஓரளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகினாலும் அதை ஈடுகட்டுகின்ற அளவிற்கு வன்னியர் பகுதிகளில் உள்ள வன்னியர் வாக்குகள் திமுகவிற்கு வெற்றியை பெற்றுதரும் என்பது உறுதி.

- டெல்லிகுருஜி