தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் வகையில் பெரிய முதலீடுகள் … மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் 409 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக வங்கியுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கவுள்ளன. நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து நவீன நகரமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் புதிதாக 409 மில்லியன் டாலர் திட்டங்கள் கிடைக்கவுள்ளது. அதுவும் மேற்குவங்க மாநிலத்திற்கு கிடைக்கவிருந்த திட்டங்கள் சில தமிழகம் பக்கம் திரும்பியிருக்கின்றன.