அதிமுக - பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!செங்கோட்டையன் சமாதானம் நடக்காதுவெளியேற்றப்பட்டவர்கள்
மீண்டும் இணைய முடியாது...!எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்...!
மீண்டும் இணைய முடியாது...!
அதிமுகவில் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த பொழுதும் அவர் முதல்வராக இருந்த பொழுதும் போயஸ்கார்டனில் இருந்து கொண்டு சுமார் 35 ஆண்டுகள் அதிகாரம் படைத்தவராக இருந்துக் கொண்டு ஆட்சியையும் கட்சியையும் ஆட்டிப்படைத்து கொண்டிருந்தார் சசிகலா நடராஜன். இவருக்கு பின்னால் இருந்து இவரை இயக்கி கொண்டிருந்தவர் அரசு அதிகாரியான சசிகலாவின் கணவர் நடராஜன் என்பது ஊரறிந்த விஷயம். குறிப்பாக ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமானவர்களையும், ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை உள்ளவர்களையும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் மீது அவர்களை குற்றவாளியாக்கி பழி சுமத்தி அவர்களை போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றுவதும் புதியவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் வாய்ப்புகளை வழங்கி அவர்களை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதிலும் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு கொண்டு ஜெயலலிதா அவர்களின் நன்மதிப்பை பெற்றுவந்தார் சசிகலா நடராஜன்.
அதிமுகவில் இருந்து மூத்த தலைவர்களையே கட்சியில் இருந்து தூக்கி எறிந்து நால்வர் அணி என்ற போர்வையில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.சி.சோமசுந்தரம், அறங்கநாயகம், போன்றோர்களை அலைய விட்டு வேடிக்கை பார்த்தவர் சசிகலா. இவர்களை போல் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பலர் உண்டு. அதில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் திருநாவுக்கரசர், திமுகவில் அமைச்சராக இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்றோர்களும் அடக்கம்.
சசிகலா நினைத்தால் கட்சியில் ஒருவருக்கு பதவி கிடைக்கும். அதே சசிகலா நினைத்தால் அமைச்சர் பதவியில் இருந்து ஒருவர் மாற்றப்படுவார் என்ற எழுதப்படாத நடைமுறை ஜெயலலிதா காலத்தில் உள்ள அதிமுகவில் இருந்து வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அதிமுகவில் தற்பொழுது உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவர்கள், கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத தொண்டர்கள் என்று ஏதாவது ஒரு வகையில் சசிகலாவின் கோபத்திற்கு ஆளாகி அவரால் பழிதீர்க்கப்பட்டவர்கள் ஏராளம் என்பதை ஒவ்வொரு தொண்டனும் உணர்ந்துள்ளார்கள்.
கூவத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்த சசிகலா அதன் பிறகு அடுத்த நிமிடம் நடந்து கொண்ட விதம் எடப்பாடியிடம் காட்டிய செயல்கள், காலில் விழவைத்து ஆசீர்வாதம் வழங்கியது போன்ற நிகழ்வு எடப்பாடிபழனிசாமியை பொறுத்தவரை பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இத்தனை அவமானங்களையும் சசிகலா அரங்கேற்றி நிறைவேற்றி கொண்டிருந்த பொழுது கூடவே இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட இவருக்கு அவர் மறைவு-க்கு பிறகு முதல்வராக எடப்பாடி பதவியேற்ற பொழுது கே.ஏ.செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்து பதவி பெற்றுக்கொடுத்தார் சசிகலா. இப்பொழுது சசிகலாவின் ராஜவிசுவாசத்தை வெளிகாட்டும் விதமாக பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாளெடுத்து சூழட்டுகிறார் கே.ஏ.செங்கோட்டையன்.
ஒ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா போன்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக பலர் தரப்பில் இருந்தும் பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்தும் பொதுவெளியில் இருந்தும் ஊடகங்கள் தொலைகாட்சி விவாதங்கள் மூலமாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் ஓய்ந்துப்போன நிலையில்
இப்பொழுது செங்கோட்டையன் மூலமாகவும், பாஜக கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் மூலமாகவும் டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுத்து ராஜதந்திர முறையில் தனது விசுவாசிகளை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு தொல்லை கொடுத்து மீண்டும் அதிமுக உள்ளே வந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் அமைதியாக இறங்கி உள்ளார் சசிகலா நடராஜன். இதை புரிந்துக் கொண்ட அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவர் பதவி வகித்து வரும் நிலையிலும் எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் எந்த பதவியும் தேவையில்லை என்று கூறிக் கொண்டு அதிமுகவிற்குள் தங்களை இணைத்துக் கொள்வதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது சசிகலாவை முற்றிலும் வெளியேற்றிய நிலையில் சில மாதங்கள் முயற்சி செய்து மீண்டும் அதிமுகவில் இணைந்து கட்சிக்காரர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைப் போல் இப்பொழுதும் சசிகலா முயற்சி செய்கிறார். இதை புரிந்துக் கொண்ட எடப்பாடிபழனிசாமி சசிகலாவையும், அவர்களோடு சேர்ந்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களையும் மீண்டும் கட்சிக்குள் புகுத்தினால் என்ன விபரீதம் உருவாகும் என்று எண்ணித்தான் இவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்.
“என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை! நம்மாமல் கெட்டவர்கள் ஏராளம்“ என்ற எம்.ஜி.ஆரின் வசனம் எடப்பாடி பழனிசாமியை வழிநடத்துகிறது. ஆகவே சமாதானம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டார். பாவம் செங்கோட்டையன் பலியாகிவிட்டார் பாவமன்னிப்பு கிடைக்குமா?
பாஜக கட்சி சமாதானத்தையும், ஒருங்கிணைக்கும் முயற்சியையும் ஒருபோதும் எடப்பாடிபழனிசாமி ஏற்கமாட்டார். தொடர்ந்து டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுத்தால் கூட்டணியை முறித்து கொள்வதற்கும் தயங்கமாட்டார். தமிழக வெற்றிக்கழகம் விஜய்யுடன் கைகோர்த்து அதிமுகவை காப்பாற்றுவதற்கும், கூட்டணி அமைப்பதற்கும் தயாராக இருக்கிறார்.
இதை புரிந்துக் கொண்டு பாஜக டெல்லி மேலிடம் செயல்பட வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் கருத்து.
- டெல்லிகுருஜி