இராமதாஸ் - சுசிலா 50 ஆவது திருமண நாள்
மாலை மாற்றிக் கொண்ட போது எடுத்தப்படம்




சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தில் பக்கத்தில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா ஓட்டலில் ராமதாஸ் இரண்டாவது மனைவி சுசிலா ஆகியோர்  50ஆவது திருமணநாள் கொண்டாட்டம் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட சுசிலாவின் உறவினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். 

டாக்டர் இராமதாஸ் தனது 88வது பிறந்தநாள் விழாவை சமீபத்தில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கட்சியை கைப்பற்றி வழிநடத்தி வரும் தருணத்தில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். கடந்த 45 ஆண்டுகாலமாக மறைத்து வைத்திருந்த இந்த சம்பவம் இப்பொழுது பகிரங்கமாக பொதுவெளியில் தெரியப்படுத்துவதன் மூலம் டாக்டர் ராமதாஸ் இதை நியாயப்படுத்துகிறார். இது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. இதனால் ராமதாசின் அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டு டாக்டர் அன்புமணியின் அரசியல் முன்னேற்றம் அடையும் என்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள்.

- குரு