“ஆன்மீக தொண்டு மூலம் சக்தி ஒளி பரவச் செய்தவர் ‘அம்மா’ பங்காரு அடிகளார்”



“மனிதனும் தெய்வமாகலாம், மகளிரும் கருவறைச் சென்று பூஜை செய்யலாம் என்ற உயரிய தத்துவத்தை மேல்மருவத்தூரில் விதை போட்டவர். ‘வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் பொன் மொழியை தொடர்ந்து பெண்கள் ஆன்மீகத்தை முன்னெடுத்துக் செல்ல வேண்டும். பெண்கள் சக்தியின் அடையாளம் என்பதை உலகறியச் செய்ததில் அடிகளாருக்கு நிகர் அடிகளார் மட்டுமே!

சாதி, மதம், மொழி, இனம் இவைகளை கடந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு தனக்கென்று ஆன்மீக பாதையை உருவாக்கி பக்தர்களை ஈர்த்தவர் ‘அம்மா’ என்ற பங்காரு அடிகளார்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

உலக பொதுமறை & திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் “எந்தப் பொருள் பற்றியும் எவரெவரிடமிருந்து கேட்பதானலும், அப்பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பது தான் அறிவு”

இந்தப் பார்வையில் எல்லா உயிர்களின் மீது அன்பை மட்டுமே செலுத்துவதுத் தான் மனித சமூகத்தின் வேர்முகம் இதன் அடிப்படையில் உலகில் பல மதங்கள் இன்னும் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப் படுகின்றன. நம் இந்திய மண்ணில் பல மதங்கள் தோன்றி நடைமுறையில் உலகில் பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.

இந்திய திருநாட்டில் சைவம், வைணவம் என்றப் பெயரில் மக்களின் வழிப்பாட்டில் இருந்த மதங்கள் காலப்போக்கில் “இந்து மதம்“ என்ற ஒற்றை அடையாளத்துடன் அரசியல் சாசனம் அங்கீகாரம் பெற்று பெரும்பான்மை இந்திய மக்கள் மற்றும் உலகம் முழுவதும் வாழும் இந்திய வம்சாவளியினர் வழிப்பாடு மட்டுமின்றி, பண்பாட்டுத் தளத்திலும் பெரும்பங்கு வகிக்கின்றன.

வரலாற்று வழித்தடங்களில் மதம், இனம், சாதி, மொழி, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆணாதிக்கம், சமுகப் பிரச்சனை இவைகளால் மனித சமுதாயம் பல நேரங்களில் பெரும் பின்னடைவு இன்றும் சந்தித்து பல இன்னல்களை அனுபவிக்கின்றன. போர் மற்றும் “இனச் சண்டை” இன்று வரை ஓயவில்லை.

அன்பை போதிக்க வேண்டிய மதம் தவறான புரிதலில் “போர் செய்ய வேண்டிய சூழலில் இன்று வரை மீளவே இல்லை. ஆத்திக கோட்பாட்டிற்கு எதிராக நாத்திக கருத்தியல் இன்றும் பேசும் பொருளாக உள்ளது.

ஆனால் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளின் தவறான புரிதலில் பல சமூக மாற்றத்திற்கான தேவையின் தேடுதலில் தென் இந்தியாவில் பல ஆன்மீகப் பணிகளில் “கர்நாடக மாநில பசவண்ணா, கேரள நாராயண குரு, தென் தமிழக வைகுண்ட அய்யா, வடலூர் வள்ளலார்” போன்றவர்கள் ஆன்மீகப் பணியில் பல சமூக மாற்றங்களுக்கு வித்திட்டு, இன்று வரை விருட்சமாக வளர்ந்து உள்ளது.

அதன் சுவடுகளில் மேல் மருவத்தூர் நிலக்கிழார் கோபால் நாயக்கருக்கும், மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கோ.பங்காரு அடிகளார் கடந்த 3.3.1941 இல் பிறந்தார். அடிகளார் ஆசிரியர் பணியில் இருந்தப் போது உத்திரமேரூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை லட்சுமி அம்மையாரை 04.09.1968&இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இவர்களும் ஆன்மீகப் பணி மற்றும் சமூக சேவையில் உள்ளனர்.

கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்வரை தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைப் போக்க அருள்வாக்கு கூறி வருகிறார். இவர் ஆரம்பித்த சித்தர் பீட வளாகத்தின் திறந்த வெளியில் “சப்தகன்னியர்’ சந்நிதியை அமைத்து பக்தர்கள் வழிப்பட ஏற்பாடுகளை செய்தார்.

25.11.1977&இல் பௌர்ணமி அன்று சித்தர் பீட வழிப்பாட்டு முறைகளின்படி “அம்மன் சிலை” அடிகளார் முன்னிலையில் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் வரலாற்று சிறப்பு என்னவென்றால் மனிதர்கள் அனைவரும் குறிப்பாக பெண் சமுதாயம் நேரிடையாக கருவறை சென்று “அம்மன் கடவுளை” தரிசிக்கலாம். ஆராதனை செய்யலாம், அம்மனுக்கு மாலை சூட்டலாம், மதம், சாதி, இனம் இவைகளைத் தாண்டி அனைவரும் குறிப்பாக பெண்கள் எல்லா காலங்களிலும் வழிப்பாடு செய்யலாம் என்பதை “ஆன்மீக வழிப்பாடு இயக்கமாக” மாற்றிய வரலாறு இவரையே சாரும்.

அடிகளார் ஆன்மீகத்தையும் சமுதாயத் தொண்டையும், தனது இரு கண்களாக பாவித்துத் தொண்டாற்றி ஆன்மீகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சித்தர் நம் பங்காரு அடிகளார் அவர்கள்&

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவரது “வார வழிப்பாட்டு மன்றம்“ உலகம் முழுவதும், குறிப்பாக பல நாடுகளில் விருட்சமாக வளர்ந்து, ஆன்மீகம் மூலமும் சமத்துவத்தை கொண்டு வந்து சாதனை மலராக அனைவரின் இதயத்தில் இருப்பார் அடிகளார் அவர்கள் இவரின் ஆன்மீகப் பயணமாக இந்தியா மட்டும் இல்லாமல், உலக முழுவதும் பயணம் செய்து ஆன்மீக மாநாடுகளை நடத்தியவர் குறிப்பாக “பெண் சமுதாய விழிப்புணர்வு” என்ற சொல்லாடலை செயலில் கொண்டு வந்தவர் இவரின் மருத்துவமனை, மற்றும் மருத்துவக் கல்லூரி இவைகளோடு பல கல்வி நிலையங்கள் சமுதாயத் தொண்டின் வெளிப்பாடு.

அடிகளார் அவர்களை ‘அம்மா’ என்று பல்வேறு மதத்துவரும் வழிபாடு செய்ய அவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழச் செய்கின்ற “மத நல்லினக்க அடையாளமாக வாழ்ந்தவர்.

“அன்னை ஆதிபராசக்திக்கு நான் வேலைக்காரன்” என் தன்னைப் பற்றி பக்தர்களிடம் தன்னடக்கத்துடன் கூறுவார். மற்ற கோயில்களை அர்ச்சகர்களைக் கொண்டு பூஜை, புனஸ்காரங்களைச் செய்யும் வழக்கத்தை மேல் மருவத்தூர் அடிகளார் மாற்றினார். இங்குள்ள சித்தர் பீடத்தில் வழிப்பாட்டு மன்றத் தொண்டர்களின் மூலம் இத்தகைய பூஜைகளைச் செய்ய அடிகளார் அனுமதித்து, குறிப்பாக பெண் சமுதாயம் பெரும் திரளாக ஆன்மீகப் பணிச் செய்ய வழிவகைச் செய்த “ஆன்மீகப் புரட்சி” அடையாளமாக திகழ்பவர் மேல்மருவத்தூர் அடிகளார் அவர்கள்.

இவரது ஆன்மீக சேவையை பாராட்டி, மத்திய அரசு, 2019&ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

பக்தர்களால் “அம்மா” என அன்பாகவும், பக்தியுடன் அழைக்கப்பட்டு வந்த “பங்காரு அடிகளார் இந்த ஆண்டு அக்டோபர் 19&ம் «தி இயற்கை எய்தினார். சக்தி வடிவில் வாழ்கிறார்.

ஆன்மீகப் பணியின் அடையாளமாக வாழ்ந்த அடிகளார் மறைவு உலகில் வாழும் ஆன்மீகச் செம்மல்கள், அரசியல் முன்னோடிகள், மனித நேதப் பண்பாளர்கள், தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், மக்களின் மனசாட்சியாக செயல்படும் அரசு மற்றும் தனியார் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர் சமுதாயம் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக வந்து அஞ்சலி செய்ததே பெரிய வரலாற்றின் போற்றத்தக்க சுவடுகள்.

ஆன்மீகப் பணியில் ‘சமத்துவ விடியல்’ கண்டு பெண்களை சக்தியின் வடிமாக உலகறியச் செய்தவர். அவர் பாதையில் நாம் அனைவரும் மனித நேயத்துடன் வாழ்வோம். ஒம்சக்தி வடிவில் அன்னை தரிசனம் செய்வோம், உலக அமைதியும், நாமும், நாட்டு மக்களும் வளம் பெறட்டும்.
-ஆர்