இஸ்ரேல் வந்தார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்



மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 13வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சென்ற நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றார்.

அங்கு அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை சந்தித்தார். அப்போது, ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரிட்டன் சார்பில் ரிஷி சுனக் இரங்கல் தெரிவித்தார். மேலும் பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். ஹமாஸின் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களாகப் பாலஸ்தீன மக்கள் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை நாம், தொடர்ந்து அளிப்பது முக்கியமானது” எனத் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.