உலகின் இளம் வயது ஆடிட்டர்
நந்தினி அகர்வால் 
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:



மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரை சேர்ந்தவர் நந்தினி அகர்வால். 21 வயதான இவர் தனது 19 வயதிலேயே ஆடிட்டர் ஆனார். இதையடுத்து அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 13 வயதில் 10-ம் வகுப்பு முடித்த அவர் 15-வது வயதில் பிளஸ்-2 முடித்தார். இவர் ஆடிட்டர் படிப்பை முடித்தபோது 83 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். 23 வயதான இவரது மூத்த சகோதரர் அப்போது 18-வது இடத்தை பிடித்திருந்தார். இதுபற்றி நந்தினி அகர்வால் கூறுகையில், எனது வெற்றியில் என் சகோதரர் பங்கு மிக முக்கியமானது என்றார். ஏற்கனவே 1956-ம் ஆண்டு லக்னோவை சேர்ந்த ராமேந்திர சந்திர கவுலி 19 வயதில் ஆடிட்டராக தேர்ச்சிபெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். இளம் வயதில் பெண் ஒருவர் சாதித்திருப்பது இதுவே முதன் முறை ஆகும்.