மதுரை வந்தார் குடியரசுத்தலைவர்
திரவுபதி முர்மு
குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு. 2 நாள் பயணமாக மதுரை, கோவைக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கோவை செல்கிறார். மேலும் கோவை ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.