ஆந்திரா மாநில தலைநகர் மாற்றம்- முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்புஆந்திர மாநிலத்தின் தலைநகர் மாற்றம் செய்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தலைநகராக இருந்த விஜயவாடாவை மாற்றி அமராவதியை தலைநகராக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.