ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழிகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பாத யாத்திரையானது மொத்தம் 3570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைகிறது. சமீபத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவு பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அரியானாவில் ராகுல் காந்தி முதல் பாதயாத்திரையை தொடங்கினார். 2-வது நாளாக அவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து இந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு ராகுலுடன் நடந்து சென்றார். மேலும் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அரியானா மாநிலம் கெர்லி லாலா பகுதியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம் தொடங்கிய நிலையில் கடும் பனிக்கு மத்தியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த நடைபயணத்தில் பங்கேற்றனர்.