டெல்லியில் ஜனாதிபதியுடன் முதலமைச்சர் சந்திப்பு- மலர் கொத்து கொடுத்து
வாழ்த்து தெரிவித்தார்புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். மலர் கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர். இதன் பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சுமார் 20 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் பதவி ஏற்ற பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பிரதாயமாக இப்போது தான் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.