அதிமுகவில் இருந்து ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்..!


அதிமுகவின் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்சியை பிளவுப்படுத்தும் விதமாக தனி அணியை உருவாக்கி திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளான ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி உள்பட ஜெ.சி.டி.பிரபாகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்பட ஒ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களான சுசு நபர்கள் கட்சி பொறுப்பில் இருந்தும் கட்சி அடிப்படை உறுப்பினர்களிலிருந்தும் நீக்கம் செய்து பொதுச்செயலாளர் என்ற முறையில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உள்பட கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, உள்பட சுசு நபர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் சுசு நபர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவது கட்சியின் எந்தவிதமான பொறுப்பில் இல்லாத ஒருவர் கட்சியின் தலைமை அலுவலகத்தை கதவை உடைத்து பூட்டை திறந்து கோப்புகளை அள்ளிக்கொண்டு கட்சியின் தலைமை அலுவலகத்தை சீல் வைப்பதற்கு காரணமாக இருந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் உள்ள எங்களை நீக்குவதற்கு எந்தவிதமான அதிகாரம் இல்லை என்று கூறுகிறார்கள்.

கட்சியின் அலுவலகத்தில் புகுந்து கலவரம் செய்தவர்களை கைது செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதன் விசாரணை எடுத்துக் கொண்டு காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி கலவரத்தன்று நடைபெற்ற சம்பவம் குறித்து வீடியோ, ஆடியோ ஆவணங்களையும் கலவரத்தில் ஈடுபட்டவர்களையும் பட்டியலோடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடிவருகிறோம். அவர்கள் சென்னையில் இருந்து தப்பிவிட்டார்கள் என்ற பதிலை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன்படி பார்த்தால் வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆட்கள் தான் தலைமை அலுவலகத்தில் புகுந்து பூட்டை உடைத்தது, கதவை உடைத்தது, கோப்புகளை அள்ளிச்சென்றது ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்பது உறுதியாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேலும் கூறும் பொழுது காவல்துறையின் ஆதரவோடு இத்தகைய அசம்பாவித சம்பவம் நடைபெற்று உள்ளது என்பதையும் முன்கூட்டியே காவல்துறையிடம் புகார் அளித்தும் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள்.

- டெல்லிகுருஜி