அதிமுகவினருக்கு வலை வீசுருகிறார் ஒ.பன்னீர்செல்வம்..!



ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் தான் இன்னும் ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறேன் என்று கூறிக்கொண்டு செய்தியாளருக்கு பேட்டி கொடுத்து வரும் தருணத்தில் தன் ஆதரவாளர்களை தொலைப்பேசி மூலமும், ஆட்கள் மூலமும் நேரடியாக சென்று தன்னை ஆதரிக்கும்படி கோரிக்கை வைத்து வருகிறார். ஒரு சில தொண்டர்களை தவிர்த்து கோவை செல்வராஜ், சென்னை என்.எம்.பாபு, இவர்களை தவிர வேறு முக்கிய நிர்வாகிகள் ஒருவர் கூட ஒ.பி.எஸ் விரும்பவில்லை என்ற செய்தி தான் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தெரியவருகின்றது இருந்தாலும் விடாமுயற்சியாக நீதிமன்றத்தை நம்பிக் கொண்டிருக்கும் அவர் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அநேகமாக அவரது கோரிக்கை நிராகரிக்கப்படும் என்றே தெரிகிறது. காரணம் பொதுக்குழுவில் என்ன நடைபெறும் என்பதை முன்கூட்டியே நீதிமன்றம் எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும் அப்படி தெரிந்துக்கொண்டால் மட்டுமே பொதுக்குழுவில் சட்டம் மீறல் இருக்கிறதா? இல்லையா என்பதை நீதிமன்றம் அறிந்துக்கொள்ள முடியும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றதினால் ஒ.பி.எஸ். கோரிக்கை வரும் புபு&ம் தேதி காலை 9 மணிக்கு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படலாம் அல்லது தீர்ப்பை தள்ளிவைக்கப்படலாம் அல்லது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி ஒ.பி.எஸ் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்படலாம்.

அப்படி நிராகரிக்கப்படும் பட்சத்தில் ஒ.பி.எஸ்சும், ஒ.பி.எஸ் ஆதரவாளர்களும் பொதுக்குழுவில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கவும் நேரிடலாம். இதையும் மீறி பொதுக்குழுவில் பங்கேற்று தீருவேன் என்று அடம்பிடித்தால் பொதுக்குழு கூட்டத்திற்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு களவரமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகலாம். இதை தான் காவல்துறை டிஜிபியிடமும் மாநகர ஆணையரிடமும் மனுவாக வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் டி.ஜெயக்குமார். ஒருவேளை பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது அவ்வைசண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஒ.பி.எஸ் ஆதரவாளர்களோ, அல்லது சசிகலா ஆதரவாளர்களோ இணைந்து கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து தலைமை கழகத்தை கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சமும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருப்பதினால் காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கையையும் தமிழக அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது டி.ஜெயக்குமார் மூலமாக.

மொத்தத்தில் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு ஒ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதினால் பொதுக்குழு கூட்டத்தை ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புறக்கணிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

- டெல்லிகுருஜி