சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது- அமைச்சர் பேட்டிகன்னியாகுமரி: தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். புதிய அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு சரியாக ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் தொகுப்பு நிதியும் சரியாக வந்து சேர வில்லை. தமிழக சிறுபான்மை யினர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.