தமிழகம் உள்பட காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஜூன் 29-ம் தேதி முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதிகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.