இலங்கை தமிழர்கள் வாழ்வு வளர
என்ன செய்ய வேண்டும்..?
இந்திய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது…? தமிழக அரசு உதவி செய்யுமா?
அழுத்தம் தருமா…?
ஆறுதலோடு நிறுத்திக் கொள்ளுமா..?
இலங்கை தமிழர்கள் ஒரு காலத்தில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து போராடினார்கள். அதன் பிறகு தனி தனி குழுக்களாக பிரிந்து இலங்கை அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் களத்தில் நின்றார்கள். இதுவே பிற்காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடி வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். குறிப்பாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் செயல்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட நாள் ஆயுதம் ஏந்தி போராடிய போது தனி ஈழப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் விதமாக இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களும் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்தன் அவர்களும் இந்திய இலங்கை உடன்படுக்கையை ஏற்படுத்தினார்கள். அந்த உடன்படிக்கையை ஏற்க மறுத்தப் பிரபாகரன் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவே தனது போராட்ட வியூகத்தை வகுத்துக் கொண்டு இந்திய ராணுவ அமைதிப்படையை எதிர்த்து நின்றார்.
வரதராஜ பெருமாள் என்பவரை வடகிழக்கு மாநில முதலமைச்சராக அறிவித்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவித்த பொழுது வரதராஜ பெருமாளையும், விடுதலைப்புலிகள் ஏற்க மறுத்து எதிர்த்து நின்றார்கள். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில் ஜெயவர்த்தனா மறைவு அவருக்கு பின் பிரமேதசா கொல்லப்பட்டது, அதன் பிறகு இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது இப்படி பல அசம்பாவிதங்கள் அரங்கேற்றப்பட்டன. இதன் பின் இலங்கை தமிழர்கள் நிலை தலைகீழாக மாறியது.
ஜெயவர்த்தன ராஜீவ்காந்தி ஒப்பந்தத்தை இலங்கை அரசு நிறைவேற்ற மறுத்தது. மகிழ்ந்த ராஜபக்சே அதிபராக பதவியேற்றப் பின் இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து நிலங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களை கொன்று குவித்து ஈழத்திற்காக போராடிய பிரபாகாரனையும் கொன்று, தமிழர்களுக்கு இருந்த தனி ஈழம் நம்பிக்கையையும் கைவிட்டு தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பல நாடுகளுக்கு அகதிகளாய் பயணம் செய்தார்கள். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் இலங்கை தமிழர்களுக்கு துணை நின்று உதவி செய்வதற்கும் இந்தியா யோசித்து கொண்டிருந்தது.
குறிப்பாக தமிழ்நாடும் ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு விடுதலை புலிகள் விஷயத்தில் விலகி நிற்கவே முடிவெடுத்தது. இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் தொப்புள்கொடி உறவு என்று தமிழர்களை கூறியவர்களெல்லாம் வெகுதூரம் விலகி சென்று விட்டார்கள். சொல்லார் துயரத்திற்கு ஆளான இலங்கை தமிழர்கள் செய்வதறியாது திகைத்த பொழுது புலம் பெயர்ந்த தமிழர்கள் சிறிது நம்பிக்கையை ஊட்டினார்கள். பிறகு தனிநாடு கோரிக்கையையும், முன்னெடுத்து செல்வதில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோன்றி மறைந்தன. தனி ஈழம் என்பது கனவுகளாய் இன்றைக்கும் இலங்கை தமிழர்கள் தோள் மீது சுமையாய் இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் தான் இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவின் ஆட்சி நிர்வாகத்தில் மகிழ்ந்த ராஜபக்சே பிரதமராகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் அதிகாரம் படைத்தவர்களாகவும் உருவெடுத்து தங்கள் தவறான நிர்வாகத்தினர் இலங்கைக்கு எதிராக திரும்பி நிலையில் தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் ஒரு குடும்பத்தின் ஆட்சி நிர்வாகத்தினால் இலங்கை பொருளாதாரம் முற்றிலும் சுரண்டப்பட்டு நலிவடைந்து அயல்நாடுகளில் கடன் வாங்குகின்ற நிலைக்கு சென்றுள்ளது. சீனாவின் முதலீடு பு0 சதவிகிதம் என்றாலும் மற்ற நாடுகளின் உதவிகளும் முதலீடுகளும் இலங்கையில் இருந்த பொழுதும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த இயலவில்லை. இலங்கை புலிகளுக்கு எதிராக அன்று நடந்த தவறு இன்று இலங்கை அரசு தீவாலாக கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மொழி, இனம், சாதி என்று பிரித்துப் பார்க்காமல் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரும்பு திசையெல்லாம் மக்கள் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதிபர் இல்லம் முற்றுகை பிரதமர் போராட்ட காலத்தில் சூழப்படுகிறது.
எதிர்கட்சிகளிலெல்லாம் ஒரு அணியில் திரண்டு கோத்தப்பய ராஜபக்சேவுக்கு, பிரதமர் மகிழ்ந்த ராஜபக்சேவுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தேனீர் அருந்துவதற்கு பால் கிடைக்கவில்லை. வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல், விலை பற்றாக்குறை சமையல் எரிவாயவு பெறுவதற்கு நீண்ட வரிசை தட்டுப்பாடுகள், விலையேற்றம், பசி, பட்டினி, இப்படி மக்கள் வாங்கும் சக்தியை இழந்து உயிர்வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். இடைக்கால அரசு சீர்செய்வதற்கு முயற்சி செய்தாலும் அதுவும் எந்தவகையிலும் பயன் அளிக்காது என்கிறார்கள் இலங்கை எதிர்கட்சியை சேர்ந்தவர்கள். குறிப்பாக தமிழர்கள், சிங்களவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இணைந்து இப்பொழுது போராட்டம் நடத்துகிறார்கள். தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காகவும் விழுந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காகவும் இந்த நிலையில் இந்தியா 7500 கோடி ரூபாய், பெட்ரோல், டீசல், உணவு பொருள்கள் பு000 கணக்கான டன் இலங்கைக்கு அனுப்பி வைக்கிறது.
ஆனால் எத்தகைய நிபந்தனையும் இந்தியா விதிக்காமல் அனுப்பி வைக்கிறது. அதே நேரம் இந்தியாவை பகைத்துக் கொள்ள இலங்கை அதிபர் குடும்பம் எந்த நேரமும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள் என்ற நிலையை உணராமலேயே இப்பொழுது இந்தியாவின் தயவை எதிர்பார்த்து உள்ள இலங்கை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் வடகிழக்கு மாநிலத்தை ஒன்றாக இணைத்து மாநில அந்தஸ்தை உருவாக்கி பதிமூன்றாவது அட்டவணையில் கீழ் கொண்டுவந்து இந்திய இலங்கை உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள் என்று தமிழர்கள் குரல் எழுப்புகிறார்கள். அன்றைக்கு இதை இலங்கை தமிழர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு இன படுகொலை ஏற்பட வாய்ப்பில்லை, உயிர்சேதமும் வந்திருக்காது. விடுதலைக்காக போராடிய பிரகாரன் அவர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்.
தமிழ் ஈழம் என்பது என்றைக்காவது ஒருநாள் உருவாகுவதற்கான வாய்ப்பும் நிலைத்து நின்றிருக்கும். துரதிஷ்டவசமாக அன்றைக்கு யார் எவர் என்பதை விட ஏற்க மறுத்தவர்களும் மறுப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர்களும் இன்றைக்கு இலங்கையில் நடைபெறும் நிலைமைகளை பார்த்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இலங்கை தமிழர்கள் அழிப்பதற்கு யார் காரணம் என்று தமிழ்நாட்டில் இருந்து குரல் எழுப்பினார்களோ, இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் தான் வாரிசு என்று அடையாளப்படுத்தி கொண்டார்களோ அவர்கள் எல்லாம் இன்று ஓர் அணியில் நின்று இந்தியாவில் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இலங்கை தமிழர்களோ, அகதிகளாய் தமிழகத்தில் தஞ்சம் அடைகிறார்கள். இத்தகைய நிலை பாயும் புலி பண்டார வன்னியர் மற்றும் காக்கை வன்னியன், உயிரோடு இருந்திருந்தால் இலங்கை தமிழர்கள் வாழ்வும், வாழ்வாதாரமும் நிலைத்து நின்று வளமோடு வாழ்ந்திருப்பார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. மொழியால் பிரிவதை விட இணைந்து உயிர்வாழ்வதையே தற்போதைய நிலைக்கு சிறந்த வழியாகும். மீண்டும் இந்தியாவில் ஆதரவைப் பெற்றால் மட்டுமே இலங்கை அரசுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும். இந்திய அரசியல் ஆலோசகர்களை நம்பினால் எதுவுமே கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இனி ஒரு ராஜீவ்காந்தி, ஒரு இந்திராகாந்தி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்கள்.
- டெல்லிகுருஜி