டெல்லியில் பிரதமர் மோடியுடன்
கவர்னர் தமிழிசை சந்திப்புதெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருமாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து விரிவான அறிக்கையையும் வழங்கி இருக்கிறார்.

புதுவையை பொறுத்த வரை விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் 6 மாவட்டங்களும் பயன்பெறும். இதுதவிர சுற்றுலா பயணிகளை கவர புதுவை-காரைக்காலுக்கு இடையே கடல்- விமான போக்குவரத்து தொடங்க வேண்டும். இது தெய்வீக சுற்றுலாவாக மேம்பட வாய்ப்பு இருக்கிறது.

புதுவையில் இருந்து விமான போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். மூடி கிடக்கும் பஞ்சாலைகளை திறக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வழங்கி அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி பேசினோம்’ என்றார்.