இடியாப்ப சிக்கலில் ஒ.பி.எஸ்.
எகிறி அடிக்கும் ஈ.பி.எஸ்..!





அமைதியானவர், ஆர்ப்பாட்டம் இல்லாதவர், வேகமாக நடக்க தெரியாதவர், எதையும் நிதானித்து பேசக்கூடியவர், அவசரப்பட்டு வாய்திறந்து பேசாதவர் மொத்தத்தில் மௌனமாகவே இருந்து காரியம் சாதிப்பவர் இப்படியெல்லாம் ஜெயலலிதாவிடமும், கட்சியினரிடமும் பெயர் பெற்றவர் ஒ.பன்னீர்செல்வம். இவர் சசிகலா குடும்பத்திற்கு எதிராக அதிமுகவில் புயலை உருவாக்கி ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோசனைப்படி ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் சசிகலா தான் என பொதுமக்கள் சந்தேகிக்கும் வகையில் ஜெயலலிதா நினைவிடத்தில் இரவு நேரத்தில் தர்மயுத்தம் நடத்தியவர் ஒ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அடம் பிடித்தவரும் இவரே. இதை தொடர்ந்து ஆறுமுகசாமி தலைவமையில் ஆணையம் அமைக்கப்பட்டது நூற்றுக்கணக்கான சாட்சிகளை விசாரணை நடத்தி முடித்து நான்காண்டு காலமாக ஆணையத்தின் காலத்தை நீட்டித்து கொண்டே எடப்பாடி பழனிசாமியோடு சமரசம் செய்துக்கொண்டு பிரதமர் மோடி அவர்களின் ஆலோசனையின் பெயரில் எடப்பாடி பழனிசாமியோடு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, துணை முதல்வர் பதவி பெற்றுக்கொண்டு தன்னை நம்பி வந்தவர்களையெல்லாம் நடுத்தெருவில் விட்டுவிட்டு 4 ஆண்டுகள் அதிமுகவில் ஆட்சியில் பதவியில் இருந்தார் ஒ.பன்னீர்செல்வம். அப்பொழுதெல்லாம் வாய் திறக்காமல் இருந்தவர் ஆட்சி முடிந்தப் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொள்கிறார் ஒ.பி.எஸ் என்கின்ற அளவிற்கு தனது பெயரை அதிமுகவினர்கள் மத்தியில் கெடுத்துக் கொண்டார் ஒ.பி.எஸ். என்கிறார்கள் அதிமுகவினர்கள். தற்பொழுது ஆறுமுகசாமி ஆணையத்தின் பொழுது சாட்சி அளிக்க சென்ற பொழுது சசிகலாவிற்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறி சசிகலாவிடம் நற்பெயரை பெறுவதற்காக முயற்சிக்கும் ஒ.பி.ஸ், எடப்பாடி பழனிசாமியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். எதிர்கட்சி தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமாக எடப்பாடி பழனிசாமி சசிகலாவை கட்சியில் சேர்ப்பது இயலாது என்ற நிலையில் இருந்து இன்றுவரை தடம் மாறாமல் குரலை சசிகலாவிற்கு எதிராக உயர்த்தி வருகிறார்.

ஆனால் ஒ.பி.எஸ் அவர்களோ, இரட்டை நிலையில் இருந்துக் கொண்டு தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் குழப்பத்தில் ஆற்றிக்கொண்டு, தானும் குழப்பத்தில் இருந்து வருகிறார். அதிமுகவில் தற்போது உள்ள சூழ்நிலையில் சசிகலாவை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டால் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றலாம் என்று ஒரு தரப்பினரும் மீண்டும் சசிகலாவை அதிமுகவில் சேர்த்தால் கட்சிக்குள் அடிமைத்தனம் மேலோங்கும் என்று இன்னொரு தரப்பினரும், கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமிடி மாவட்ட செயலாளர்கள், மூலம் தீர்மானம் நிறைவேற்றுவதை சுட்டிக்காட்டி கட்சியில் சேர்க்க கூடாது என்று அடம்பிடிக்கிறார். இதனால் ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுக்கிறது. எப்படியும் அதிமுகவினர் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பல வழிகளில் ஏற்பாடு செய்து வரும் சசிகலா பொறுமைகாத்து வருகிறார்.

- டெல்லிகுருஜி