திமுக ஆட்சி மீது வன்னியர்கள் அதிருப்தி...!



நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிப் பெற்றும் குறிப்பாக பல இடங்களில் வன்னியர்கள் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தாலும் நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கும், மேயர் பதவிகளுக்கும் வன்னியர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்ற குறைப்பாடு. குறிப்பாக மேயர் பதவி, நகர்மன்ற தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் அதிக வார்டுகளில் வன்னியர்கள் வெற்றிப் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதி வெற்றிப்பெற்ற சிலருக்கு வாய்ப்புகளை திமுக கழகம் பகிர்ந்து அளித்துள்ளது. ஆனால் அதிக இடங்களில் வெற்றிப்பெற்ற வன்னியர்களுக்கும் அதிக இடங்களில் திமுக வெற்றிப் பெற வாக்களித்த வன்னியர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. திமுகவில் உள்ள வன்னியர்களுக்கு வருத்தத்தை அளித்து உள்ளதாம். அதே போல் 3சு அமைச்சர்கள் இருந்தும் சு0&க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் 3 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்று இருப்பது பெறுத்த குறைப்பாடாக கருதுகிறார்களாம். ஒரு சிலர் இத்தகைய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி சமுதாய மக்கள் இடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி திமுகவிற்கு எதிர்நிலையை உருவாக்கி வருகிறார்களாம்.


- டெல்லிகுருஜி