நான்கு மாநில தேர்தல் முடிவுகள்-..! “அக்னிமலர்கள்” கணிப்பு
100% உறுதியானது! (உ.பி)உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளும் வெளிவந்துள்ளது. இதில் 4 மாநிலத்தில் பாஜக ஆட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. உ.பி., கோவா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் மீண்டும் பாஜக கட்சி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. உத்திரகாண்ட்டில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலம் தேர்தல் முடிவு ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. மொத்தமுள்ள தொகுதிகளில் 97 வெற்றிப் பெற்று காங்கிரஸ் கட்சியின் ஒட்டு வங்கியை தூள் தூளாக்கி உள்ளது ஆம் ஆத்மி கட்சி. பாஜக கட்சி கூட்டணி பஞ்சாப் மாநிலத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. “அக்னிமலர்கள்” கடந்த மாதத்தில் இருந்து உத்திரப்பிரதேச தேர்தல் குறித்து தனது கருத்தை தெளிவாகவும், குறிப்பாக இத்தனை தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்று மிக துல்லியமாக தனது கருத்தை வாசகர்களுக்கு வெளியிட்டிருக்கிறது. சற்று ஏறக்குறைய மிக மிக துல்லியமாக தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளிவந்துள்ள நிலையில் பாஜக கட்சியின் கடந்த காலத்தில் பெற்ற வெற்றியை விட சுமார் 60 தொகுதிகளில் இழக்க வேண்டிய நிலை உருவாகலாம். இருந்தாலும் சு5சுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கட்சி வெற்றிப்பெற்று முதல்வர் யோகி ஆதித்தனார் மீண்டும் முதல்வராக வருவார் என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும், புள்ளி விவரத்தோடு அக்னிமலர்கள் வெப்சைட்டில் பதிவு செய்திருந்தோம். தற்பொழுது வெளிவந்துள்ள முடிவுகள் இதற்கு சாட்சியாகவே அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

  • டெல்லிகுருஜி