திமுகவுக்கு தாவும் கவுன்சிலர்கள்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக சுயேட்சைகளாகவும் மாற்று கட்சியில் இணைந்தும் போட்டியிட்டு தங்கள் சொந்த செல்வாக்கில் வெற்றிப்பெற்று சுயேட்சைகளாக களத்தில் நின்று வென்ற பல ஆளுங்கட்சியான திமுகவிற்கு தங்களை சேர்த்துக் கொள்ள தூது விட்டு பல சுயேட்சை கவுன்சிலர்களும் கட்சி சார்ந்த வார்டு உறுப்பினர்கள் பலர் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாவட்ட அமைச்சர்களும் அதை ஊக்கப்படுத்தி வரவேற்று திமுகவில் இணைத்து வருகிறார்கள். இப்படி பல சுயேட்சைகளும் சில அரசியல் கட்சி சார்ந்த வார்டு உறுப்பினர்களும் குறிப்பாக அதிமுக, தேமுதிக, பாமக, அமமுக போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். உதாரணத்திற்கு ஓசூர் மாநகரத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் திமுகவில் தேர்தல் முடிந்து வெற்றிப்பெற்ற அடுத்த நாளே தங்களை திமுகவில் சேர்த்துக் கொண்டார்கள். இது போல் இன்னும் பலர் திமுகவில் தங்களை சேர்த்துக் கொள்வதற்கு தங்களை தயாராக்கி கொள்கிறார்கள். இப்படி கட்சி சார்பில் வெற்றிப் பெற்ற பலர் குறிப்பாக அதிமுக, பாமக சேர்நதவர்கள் விரைவில் ஆளுங்கட்சியான திமுகவில் சேருவதற்கு காலம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வந்தாரையும், வருவோரையும் வரவேற்று மகிழ்ந்து சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொள்கிறது திமுக. இது எப்படி இருக்கு.


- டெல்லிகுருஜி