அதிமுக நிர்வாகிகளை
கூண்டோடு மாற்ற வேண்டும்!
கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆவேசம்!     

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு காரணமானவர்களும் கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி தொண்டர்களின் உணர்வுகளை மதித்து அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் முடிவெடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் மக்கள் விருப்பு வெறுப்பின்றி அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்திருப்பார்கள். ஆனால் அந்த நிலை ஏற்படாமல் போனதற்கும் அதிமுக பல இடங்களில் தோல்வியுற்றதற்கும் இரட்டை தலைமையும் மாநில மாவட்ட நிர்வாகிகளுமே முழு பொறுப்பேற்க வேண்டும். குறைந்தபட்சம் மாநில நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் தங்களை சுயபரிசோதனை செய்துக் கொண்டு முடிந்தால் தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விலகி இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பதவிகள் கொடுத்து கட்சியை சீறும் சிறப்புமாக வழிநடத்தி சு0சு4 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு ஏற்ற திட்டத்தை தயாரித்து கட்சியை விட்டு விலகியவர்களெல்லாம் கட்சியில் இணைத்துக் கொண்டு ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்கி ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக கூட்டணியை அமைத்து தேர்தலிலே மாபெரும் வெற்றி அடைவதற்கு கட்சி நிர்வாகிகள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறோம், எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது ஒன்னரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பமாகும். நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு அதிமுக ஏன் தள்ளப்பட்டது என்பதை யோசித்துப் பார்த்தால் கடந்த கால நான்காண்டு ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாகம் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிகாரிகளை வைத்து திட்டங்களை நிறைவேற்றி அதன் மூலம் ஆதாயம் அடைவதற்கு ஏற்ற வகையில் தேர்தலை தள்ளிவைத்து கட்சி தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்காமல் காலம் கடத்தியதும், ஒரு காரணம். இரண்டாவது காரணம் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் புசு0 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசின் சலுகைகளையும் ஒப்பந்தங்களையும், கான்ட்டிரக்ட் எடுப்பதிலும், கட்சியினரை தவிர்த்து காசு கொடுக்கும் செல்வாக்கு படைப்பவர்களுக்கும் வேலைகளை வாரி வழங்கியதும், பொறுப்பில் இருந்த அமைச்சர்களே தங்கள் உறவுகாரர்கள் பெயரில் புதிய புதிய நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனங்கள் பெயரில் கான்ட்டிரக்ட் எடுத்துக் கொண்டு காலம் காலமாக செய்துவரும் சிறுசிறு ஒப்பந்ததாரர்களையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு “பேக்கஜ்” முறையில் டெண்டர் விட்டு அதிலும் நேர்மையை கடைப்பிடிக்காமல் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டி கட்சி தொண்டர்களுக்கும் ஆட்சிக்கும் தொடர்பு இல்லாமல் விலக்கி வைத்தது இரண்டாவது காரணமாகும்.

மேலும் மத்தியில் உள்ள பாஜக பிரதமர் மோடி அவர்களையும் உறுதியாக ஆதரிக்காமல் தனிநபர்கள் தேவைக்கேற்ப மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதும், மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை கண்மூடித் தனமாக ஆதரித்து மக்களின் வெறுப்புக்கு ஆளானதும் மூன்றாவது காரணம். குறிப்பாக சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை இந்துக்கள் சாதி அடிப்படையிலான வாக்குகள் அதிமுகவிற்கு ஏன் கிடைக்காமல் போனதற்கு என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தோழமை கட்சிகள் கூட்டணி விட்டு வெளியேறும் பொழுது அவற்றை கூட்டணியில் தக்கவைத்துக் கொள்கின்ற முயற்சியில் ஈடுபடாமல் கூட்டணி விட்டு வெளியேறுவதினால் போனால் போகட்டும் என்று விட்டு விடுவது போன்ற செயல்கள் அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட ஒரு இடைவெளியே நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்விக்கு முழு முதற் காரணமாக அமைந்துவிட்டது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்மன்ற தேர்தலில் 10 மாநகராட்சிகளையும், நகராட்சியில் பெரும்பான்மையான இடங்களையும், பேரூராட்சியில் அதிக இடங்களையும் வெற்றிப்பெற்ற அதிமுக கழகம் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு தொடர்ந்து தோல்வி அடைவது என்பது எதனால் என்பதை கட்சியின் நிர்வாகிகள் விவாதிக்காமல் இருப்பது தவறுக்கு பொறுப்பேற்காமல் தட்டி கழிப்பது தனிநபர்கள் ஆசா, பாசங்களுக்கு இடம் கொடுத்து கட்சியினர்கள் மத்தியிலும், நிர்வாகிகள் மத்தியிலும் நம்பகத்தன்மையை இழந்து கோஷ்டி பூசலுக்கு வழிவகுத்ததும், தோல்விக்காண காரணங்களுக்கு ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் அதிமுக எந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த காரணமும், அதன் நோக்கமும் நிறைவேறுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. சோர்வுற்று இருக்கும் இந்த தருணத்தில் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே கட்சியின் மூத்த நிர்வாகிகளின் விருப்பமாகும்.

- டெல்லிகுருஜி