600 மருத்துவ இடங்கள் வன்னியர்களுக்கு
இந்த ஆண்டு மறுக்கப்படுகிறதா?
முடிவு நீதிமன்றத்தின் கையில்…!



பாராளுமன்றத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தமிழ்நாட்டை பற்றியும், தமிழ்நாட்டு கலாச்சாரம், பண்பாடு, மக்களின் குணாதிசயம் போன்றவற்றை போன்று குறித்தும், குறிப்பாக நீட்தேர்வு விலக்கு வேண்டுமென்று திமுக மாநில அரசை (திமுக) வலியுறுத்து வதும் தொடர்ந்து அதை மத்திய அரசு (பாஜக) அது முடியாது என்று கூறி திருப்பி அனுப்புவதும், கோரிக்கை என்று பாராமல் உதாசீனப்படுத்தும் இது ஒரு தொடர்கதையாக இருந்து வருவதும் இது மாநில சுயாட்சிக்கு இது ஒரு சவால் என்பது போலவும் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கவில்லை என்பது போலவும் உணர்ச்சி மிகு உரையை நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பிய ராகுல்காந்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை குஷிப்படுத்தியதோடு பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்து அவர் உரையை கவனமாக கேட்டார்கள் என்பதும் இன்று ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் பேசப்படும் இந்த உரையில் பேச்சு தாக்கம், வீச்சு தமிழ்நாட்டு திமுகவினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது. மாநில சுயாட்சி குறித்தும், மத்தியில் கூட்டாட்சி குறித்தும் திமுக உறுப்பினர்களை விட கூடுதலாக தனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ள ராகுல்காந்தி அவர்களை எல்லோரும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் நன்றி சொல்லி பாராட்டுகிறார்கள். நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்று வற்புறுத்துகின்ற ராகுல்காந்தி அவர்கள் சமுகநீதி வேண்டும் என்று கருதினாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதையும் மாநில அரசு இயற்றிய அந்த சட்டத்தையே ரத்து செய்து உத்தரவிட்டதையும் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் முன் எடுத்து வைத்து 10.5 சதவிகிதம் மருத்துவத்தில் வன்னிய மாணவர்களுக்கு கிடைக்காமல் போனது குறித்தும் அவர் வாய் திறக்கவில்லை. அதே போல் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்க நினைத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பல மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதுகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கொஞ்சம் கூட பதற்றம் அடையவில்லை.

சட்டம் ரத்து செய்யப்பட்டதும் அது வன்னியர்களுக்கு எதிராக அமைந்ததையும் கண்டித்து எந்தவித அறிக்கையோ இது சமூக நீதிக்கு எதிராக செயல் என்ற வருத்தத்தையோ வெளிப்படுத்தவில்லை. இது மட்டுமல்ல சமூக நீதிக்கு புதிய பரிணாமத்தை உருவாக்கி தருவதாக புதிய வடிவில் உரிமையை பெற்று தறுபவராக மு.க.ஸ்டாலின் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்றும் மாநிலத்தில் இருந்து மத்திய அரசு ஈர்க்கின்ற அளவிற்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்றெல்லாம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தொலைக்காட்சி பங்கேற்பாளர்களும், ஊடகவியலாளர்களும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தங்கள் உணர்ச்சி மிகு பதிவை செய்கிறார்கள். முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஏற்பட்ட இழப்பை குறித்து 600 மருத்துவ இடங்கள் பறிபோனது குறித்தும் வாய் திறந்து பேச மறுக்கிறார்கள். இருந்தாலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது. அந்த வழக்கு முடிவதற்குள் இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு நடந்து முடிந்துவிடும்.ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு வன்னியர்களுக்கு எதிராக வந்தாலோ, அல்லது ஆதரவாக வந்தாலோ இந்த ஆண்டு எந்த பலனையும் தரப்போவதில்லை.

அதே நேரம் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தோராயமாக 600 மருத்துவ இடங்களை நிறுத்திவைத்துவிட்டு, மற்ற இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கமோ ஒரு தனிநபரோ இதுவரை நீதிமன்றத்தை நாடவில்லை. இருந்தாலும் 10.5 சதவிகிதம் தனி உள்ஒதுக்கீடு என்பது வன்னியர்களுக்கு கட்டாயம் கிடைத்தாக வேண்டிய ஒன்று என்பது எவராலும் மறுக்க முடியாது. ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தோல்வியடையும்மானால் மீண்டும் தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றிய மாநில அரசுக்கு உள்ள உரிமையையும், சமூக நீதி சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்குமா? அல்லது உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை காரணம் காட்டி இந்த ஆண்டைப் போல் அடுத்தாண்டு அதற்கு அடுத்தாண்டு என்று இரண்டு ஆண்டுகளை கடந்து நாடாளுமன்ற தேர்தல் வரும் காலகட்டத்தில் 2024 வரும் பொழுது தமிழ்நாடு அரசாங்கம் சட்டம் இயற்றி வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு 10.5 சதவிகிதம் வழங்குவதாக அறிவித்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவும் அல்லது முயற்சிக்காமலும் போகலாம். இன்றைய தமிழ்நாட்டு சூழ்நிலையை பார்க்கும் பொழுது அரசியல் ரீதியாக சமூக நீதியை நிலைநாட்டுவதில் மாநில அரசின் நிலைப்பாடும் வன்னியர்களின் நிலைப்பாடும் வெவ்வேறு திசையில் பயணிக்கிறது என்பதை உணர முடிகிறது. எந்த வகையில் பார்த்தாலும் சமூக நீதி அடிப்படையில் பெரும் இழப்புக்கு நஷ்டத்திற்கும் ஆளாகிறவர்கள் வன்னியர்கள் மட்டுமே என்பது உறுதியாகிறது.

அரசியல் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு முயன்றால் மட்டுமே நியாயத்தின் தராசு சமநிலையில் நிற்கும். ஒரு சமுதாயம் போராடி சமூக நீதியை அடைவதற்கு முயற்சி செய்தால் அதில் வெற்றி பெறுவதற்கு நெடுங்காலம் ஆகலாம். அதற்குள் சட்டம் இயற்றும் இடத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு நிவாரணம் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்துத் தான் பார்க்க வேண்டும்.

- டெல்லிகுருஜி