மேலும் 54 சீன செயலிகளுக்கு
தடை விதித்தது இந்தியா

மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா
சீனா, இந்தியா
புதுடெல்லி:

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் 54 சீன செயலிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதில் பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்பி ஹெச்.டி, விவோ வீடியோ எடிட்டர், டுயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட 54 செயலிகள் அடங்கும்.

ஏற்கனவே, சீனாவின் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் உள்ளிட்ட 224 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.