இலவசங்களை அறிவிப்பது
தேர்தலின் நேர்மையை பாதிக்கும்- உச்சநீதிமன்றம் கருத்து





இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.


புது டெல்லி:

மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் என பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்களை அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.