டெல்லியில் வைகோ...!
மதிமுக எங்கே?




திமுக கூட்டணியில் இடம்பெற்று சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அவரது வைகோ தனது மகன் துரைவையாபுரியை நியமனம் செய்தார். அதன் பிறகு அந்த கட்சியினுடைய செயல்பாடுகள் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக வைகோ அவர்கள் டெல்லிக்கு சென்றார். இன்று வரை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு விஷயங்களில் விவாதங்களில் கலந்துக் கொண்டு சென்னைக்கு வருவார் டெல்லிக்கு செல்வார் தேவைப்பட்டால் பத்திரிகையாளர்களை சந்திப்பார், இப்படி வைகோவின் அரசியல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஏழு பேர் விடுதலை குறித்தும் சமீப காலத்தில் அவர் எந்தவொரு குரலும் எழுப்புவதில்லை. விடுதலை புலிகள் குறித்த கருத்துக்களையும் அவர் வெளிவட்டாரத்தில் பேசுவதில்லை. பிரதமர் மோடி, அத்வானி போன்றவர்களை சந்திப்பதோடு தனது அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்கிறாரோ என்ற சந்தேகம் மதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் (2021) மதிமுக, உதய சூரியன் சின்னத்தில் நின்று அதில் வெற்றியும் பெற்றார்கள். அதன் பிறகு மதிமுகவை பற்றி பொதுமக்கள் மத்தியில் எந்தவித பேச்சும் மூச்சும் இல்லாமல் அமைதி மட்டுமே நிலவுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் மணமக்களை வாழ்த்திய வைகோ டெல்லி நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். பரபரப்பான அரசியலுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கட்சியை தூக்கி நிறுத்துவதற்கும் எப்பொழுது கவனத்தை செலுத்துவார் அல்லது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனது கட்சியை வழிநடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. - டெல்லிகுருஜி