திசைமாறும் தமிழக அரசியல்
தடுமாறும் கூட்டணி :
ரஜினி எந்த பக்கம் 
தண்ணி காட்டும் பாமக... 
அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் திமுக அதிமுக

தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது. தேர்தல் கமிஷனோ சுறுசுறுப்படைந்து தமிழகத்தில் எப்பொழுது தேர்தல் நடத்தலாம் என்று ஆலோசனை நடத்துகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஏற்றாற் போல் திமுக, அதிமுக ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கிவிட்டது. அதே நேரம் இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்குவதற்கு நாள் குறித்துவிட்டது. இதில் திமுக வழக்கத்தை விட முந்திக்கொண்டு தனது முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரண்டாம் கட்ட பிரச்சாரத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது பங்கிற்கு முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு கொரனோ நிவாரணம் வழங்குவதாகவும் மாவட்ட ஆலோசனை என்ற பெயரிலும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நடத்திவருகிறது.

தற்பொழுது அதிகாரபூர்வமாக எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தையும் தன்னிச்சையாக தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை முதல் கட்ட தேர்தலை தென்மாவட்டம் மதுரையில் தொடங்கி. இரண்டாம் கட்டமாக வடதமிழகத்தில் தொடங்கி நடத்திவருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக அரசியல் களம் படுவேகமாக தமிழகத்திற்கு போய்கொண்டு இருக்கிறது. அதிமுக பாஜக கட்சி தொடங்கி பாமக வரை பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையிலேயே ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். பாஜக கட்சி தனது வேல்யாத்திரை மூலம் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டு இரண்டாம் கட்ட பிரச்சாரத்திற்கு முடிக்கிவிடப்பட்டுள்ளது. தமிழக வாக்காளர்களோ தமிழகத்தில் அடுத்த ஆட்சியை கைப்பற்ற போகும் கட்சி எது என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் களம் என்பது அதிமுக, திமுக இரு கட்சிகளை சார்ந்தே இருந்த நிலையில் தற்பொழுது இருகட்சிகளுக்கும் சவாலாக அரசியல் மாற்றத்திற்கான ஒரு களம் அமையும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த மூன்றாவது களத்திற்கு யார் தலைமை ஏற்று நடத்துவது என்ற போட்டியில் ரஜினிகாந்த் அவர்களும், கமலஹாசன் அவர்களும் ஒருவரையொருவர் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுகவின் தோழமை கட்சியான பட்டாளி மக்கள் கட்சி ஒருபுறம் ஆளுங்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு தனது முன்னுரிமை வெளிப்படுத்தும் விதமாக தனது கட்சியினரை உற்சாகப்படுத்திக் கொண்டு செயல்படுகிறது.

மொத்தத்தில் தமிழக அரசியல் களம் திசைமாறி சென்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் காலம் நெருங்க, நெருங்க அதிமுக திமுக இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக்கொள்வதில் தீவிரம் காட்டுவார்கள். தோழமை கட்சிகளாக இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் தங்கள் விருப்பம் நிறைவேறவில்லை என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரம் தோழமை உணர்வை தாண்டி தாங்கள் கட்சியின் வெற்றிக்காக மட்டும் கடுமையாக உழைப்பார்கள். ஆளுங்கட்சியை வீழ்த்தி எதிர்கட்சியாக இருக்கும் திமுக ஆட்சியை கைப்பற்றுவதற்கு கடுமையாக போராடும். கடைசி வரை களத்தில் நின்று வாக்குகளை சேகரிக்கும். என்ன விலை கொடுத்தாலும் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்ற கட்டாய நிலைக்கு செல்லும். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இன்னொரு வாய்ப்புக்காக 5 ஆண்டு காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் தமிழக அரசியலில் இருந்து திமுக தனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியதைப் போல் “தேர்தலில் வெற்றிப் பெற்றால் அண்ணா வழி தோல்வியுற்றால் பெரியார் வழி” என்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படலாம். 

இந்த அபாயத்தில் இருந்து தங்கள் கட்சியையும், தங்களையும் பாதுகாத்து கொள்வதற்காக ஆட்சியை கைப்பற்றி கொள்வதற்காக திமுக ஈடுபடும். அதே போல் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக எப்பாடு பட்டாவதும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று கையாண்டு வாக்காளர்களுக்கு விலைக்கு  மேல் விலை கொடுத்து வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு விதமான திட்டங்களை தயாரித்து அதிகாரிகளின் துணைக்கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடவேண்டும் என்று நம்பிக்கையுடன் முயற்சித்து வருகிறது.

இதற்கு உறுதுணையாக மத்திய ஆளுங்கட்சியான பாஜக கட்சியும் மாநில கட்சியான பாமகவும் அதிமுகவுக்கு துணையாக இருந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு துணை இருக்குமா அல்லது அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக கட்சி தலைமையேற்று தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் அதிமுக பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஒரே அணியில் 2021 தேர்தலை சந்திக்கும் என்பதில் உறுதியாக கூறலாம். தமிழக வாக்காளர்கள் மனநிலையோ மாற்றத்திற்கான வழியை தேடுகிறார்கள். திராவிட கட்சிகளை தவிர்த்து புதிய கட்சிகளுக்கு போதிய பலம் இல்லாதினால் மீண்டும் திராவிட கட்சிகளையே நாடுவார்களா அல்லது புதிய வாக்காளர்கள் பாதையில் புதிய அணிக்கு ஆதரவு கரம் நீட்டுவார்களா என்பது போக போகத்தான் தெரியும்.

- டெல்லிகுருஜி