அதிமுக தொண்டர்கள் விரும்பாத பாஜக கூட்டணி!

அதிமுக தொண்டர்கள் விரும்பாத பாஜக கூட்டணி!


அதிமுக - பாஜக கூட்டணி, அமித்ஷா, எடப்பாடி கூட்டணி என்பதாக அதிமுகவினர் பார்க்கிறார்கள். இந்த கூட்டணி அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு அதிர்வலையை உருவாக்குகிறது என்றால் அது மிகை யில்லை . தமிழகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆதரவு பெற்ற அதிமுகவினர் மத்தியில் தற்பொழுது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தீவிர ஆதரவாளர்களாக உள்ள, பாஜக கூட்டணி கட்சியை ஏற்றுக்கொண்டு ஜீரணிக்க முடியவில்லை என்று அதிமுகவிற்கு ஒரு பெரிய தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தொண்டர்கள் மனநிலை உருவாகியுள்ளது. மாவட்ட அளவில் முதற் கட்டம், இரண்டாம் கட்டம் தலைவர்கள் மத்தியில் கூட இதுபோன்ற அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக பதவியில் உள்ளவர்களும், பதவி இல்லாதவர்கள் கூட அதிமுக பாஜக கூட்டணியை ஏற்க மறுக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒ.பன்னீர்செல்வம், பாஜக கட்சியின் கூட்டணியை தேர்தல் வருவதற்கு முன்பாகவே முடிவு செய்திருப்பது அதிமக வாக்கு வங்கியை பெருமளவில் சரிவை ஏற்படுத்த கூடியதாக அமைந்திருக்கிறது என்று புலம்புகிறார்கள்.


இது மட்டுமல்ல பெருபாலான அதிமுகவினர் ரஜினி வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தருணத்தில் அமித்ஷாவின் வருகையும் கூட்டணி முடிவும் ஏற்புடையதாக இல்லை என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால் பாஜக கட்சியை சேர்ந்தவர்களுக்கு இந்த கூட்டணி என்பது தமிழகத்தில் தங்களுக்கு மகுடம் சூட்டுவதற்கான ஏற்பாடு என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். குறிப்பாக 236 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நினைத்து வேல் யாத்திரை ஊர்வலத்தில் அதிகாலையில் கூட்டம் கூடுகிறார்கள். இந்த கூட்டணி குறித்து அதிமுகவில் உள்ள சிறுபான்மை மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் மௌனம் காத்துக் கொண்டிருப்பது எதிர்கட்சியான திமுக கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.


அதே நேரம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் திமுகவினரிடம் பெரும் எழுச்சியை உருவாக்கினாலும் வாக்குகளை பெறுவதற்கு இந்த சுற்றுப்பயணம் பயன்படாது என்ற பேச்சும் எழுகிறது. அதிமுக பாஜக கூட்டணி என்பது தமிழக மக்களால் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை பார்க்கும் பொழுது இது பொருந்தாத கூட்டணி என்ற அளவில் வார்த்தை போர்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் பாஜக வுக்கு லாபம், அதிமுகவிற்கு நஷ்டம். இதை ஈடுகட்டுவதற்கு தேர்தலில் எத்தகைய வழிமுறைகளை கையாள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


- டெல்லிகுருஜி