திமுகவுக்கு சின்ன ஆசை! பெரிய விபரீதம்!!

திமுகவுக்கு சின்ன ஆசை! பெரிய விபரீதம்!!


காடுவெட்டிகுரு மகன் கண்ணதாசனை திமுகவை ஆதரவாக மாற்றிவிட்டால் வன்னியர்கள் வாக்கு திமுகவுக்கு கிடைக்கும் என்று நம்பினால் அது நடக்காத காரியம். மாறாக திமுகவில் பல ஆண்டுகளாக இருக்கும் வன்னியர்களின் வாக்கு திமுகவுக்கு எதிராக மாறும் அபாயம் ஏற்படுமே தவிர காடுவெட்டிகுரு மகன் கனலரசன் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை சந்தித்து பூங்கொத்து கொடுப்பதினால் கனரசனுக்கு வேண்டுமானால் ஆதாயத்தை பெறலாம். ஆனால் காடுவெட்டி குருவின் ஆதரவாளர் வாக்கு ஒரு வாக்கு கூட திமுகவுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை திமுக புரிந்துக் கொண்டு தங்கள் கட்சியிலுள்ள வன்னியர்களுக்கு முன்னிறுமையயும் முக்கியத்துவமும் தந்து அவர்களை நம்பினால் திமுக வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் உதவி கரமாக இருக்கும் என்பதே வன்னியர்களின் புலம்பல்.


20 வயது கூட தாண்டாத ஒரு சிறுவனை நம்பி அவன் நடத்தும் மாவீரன் மஞ்சள் படை என்பதை நம்பினால் எப்படி வன்னியர் வாக்குகளை திமுக பெறமுடியும். காடுவெட்டி குருவையே ஏற்றுக்கொள்ளாத வன்னிய சமுதாயம் அவரது மகனை நம்பி அவரது பின்னால் எப்படி செல்லும் என்பதை திமுக யோசித்து பார்க்க வேண்டும். ஏதோ ஒரு சிறுவனை நம்பி இந்த சமுதாயம் இருப்பது போல் ஒரு மாய தோற்றத்தை வன்னியர்கள் மத்தியில் உருவாக்க நினைத்தால் அது திமுகவிற்கு மிகப் பெரிய பின்னடவை ஏற்படுத்துமே தவிர வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு எந்த வகையிலும் உதவாது.


இந்த சூட்சுமத்தை நன்றாக புரிந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் அவர்கள், டாக்டர் அன்புமனி அவர்களும் இந்த குடும்பத்தை சுலபமாக கழற்றிவிட்டு விட்டார்கள். பிஞ்சிலேயே பழுத்து காசு ஆசை கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு விரும்புகின்ற ஒருவனை வைத்துக்கொண்டு பாமக கட்சி வெற்றிப் பெற முடியாது என்பதால் தான் காடுவெட்டி குருவின் குடும்பத்தையே ஒதுக்கி வைத்துவிட்டார் டாக்டர் ராமதாஸ். இதை புரிந்துக் கொள்ள திமுக வன்னியர்களின் தலைவராக காடுவெட்டி குருவின் மகன் உருவாகிவிட்டான் என்று நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுடன் திமுகவில் உள்ள வன்னியர்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்பது வன்னியர்களின் புலம்பலுக்கு காரணம்.


இன்றைய வன்னியர்கள், வன்னிய இளைஞர்கள் டாக்டர் ராமதாசையும், டாக்டர் அன்புமனியையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் பல்வேறு திசைகளில் சிதறி கிடந்தாலும் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் பண்ருட்டி வேல்முருகன் தன்னால் முடிந்த உதவிகளை வன்னிய சமுதாய இளைஞர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன் என்றும் சாதி ரீதியாக நான் ஒரு வட்டத்துக்குள் அடைப்பட்டு ஆதாயம் தேட விரும்பவில்லை என்கிறார். இருந்தாலும் டாக்டர் ராமதாசின் எதிர்பாளர்களை வழிநடத்துவதில் என்றைக்கும் நான் சோடை போகமாட்டேன். என்னை நம்பியவர்களை கைவிடமாட்டேன் என்று கூறுகிறார் பண்ருட்டி வேல்முருகன்.


பல்வேறு வன்னிய சங்க அமைப்புகளை நடத்துகின்ற நடத்தி வருகின்ற ராமதாஸ் எதிர்ப்பாளர்களுக்கு இன்றும் தன்னாலான உதவிகளை செய்து அரசியல் ரீதியாக தனது நடவடிக்கைகளை தொடர்கிறார் பண்ருட்டி வேல்முருகன். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பண்ருட்டி வேல்முருகன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமதாசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திமுக கூட்டணிக்கு ஆதரவாக வன்னியர் வாக்குகளை திசை திருப்பி மாபெரும் வெற்றியை பெறுவதற்கு துணை நின்றதைப் போல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்று திமுக ஆதரவு கட்சிகள் வெற்றிக்காக உழைப்பதற்கு தயாராகி வருகிறார் என்று பண்ருட்டி வேல்முருகன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.


இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை திமுகவில் சேர்த்துக் கொண்டு வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது திமுக என்று வேல்முருகன் ஆதரவாளர்கள் முணுமுணுக்கிறார்கள்.


- சாமி