தாய் சொல்லே மந்திரம்…
மகிழ்ச்சியில் அன்புமணி…\
தைலாபுரமா? பணையூரா? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் பனையூரே தைலாபுரமாக மாறி விட்டது என்பது தான் இதற்கு பதில்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் பாமக கட்சி தலைவர் அன்புமணியின் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட மாட்டார்களா அப்படி பிரிந்து விட்டால் நமது அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள்.
கூடவே வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த குட்டி அரசியல்வாதிகளும் துள்ளி குதிக்கிறார்கள். தங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று ஆனால் நடக்கப்போவது ஒன்றுமில்லை. அனைத்துமே நமுத்து போன தீ குச்சிகளாக ஆகி விட்டது. பெண் என்றால் பேயும் இறங்கும் என்பதற்கு இணங்க டாக்டர் அன்புமணியின் செயல்களால் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இனி இறங்கி தான் வரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு ஒரே காரணம் சரஸ்வதி அம்மையார் அன்புமணியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆசீர்வாதம் செய்து திலகம் இட்டு உச்சி முகர்ந்து வாழ்த்தியது தான்.
இதுமட்டும் அல்ல சௌமியா அவர்களுக்கும் அவர்கள் மூன்று பிள்ளைகளுக்கும் திலகம் இட்டு ஆசீர்வாதம் செய்து வாழ்த்தியது டாக்டர் ராமதாஸ் அவர்களின் பிடிவாத குணத்தையும், கல் மனதையும் கரைத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
தாய் மகனை சந்திப்பது என்பது சகஜமான ஒன்று தான் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது டாக்டர் இராமதாஸ் அவர்களே கூறிவிட்டார். இன்னும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் டாக்டர் ராமதாசும் அன்புமணியும் நேருக்கு நேர் சந்தித்தால் அது குறித்து செய்தியாளர்கள் கேட்டால் தந்தையும் மகனும் சந்திப்பது வழக்கமான ஒன்று தான் என்று பதிலளிப்பார். ஆக மொத்தம் கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து இருவரும் புரிந்துக் கொண்ட விஷயம் நாம் இணைந்து இருந்தால் மட்டுமே பாட்டாளி சொந்தங்கள் பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் ஓர் அணியில் நின்று அரசியலில் நம் எதிரிகளை வீழ்த்த முடியும் என்ற முடிவுக்கு இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இதை உணர்ந்துக் கொண்ட வன்னிய சமுதாய மக்கள் பெரிய மருத்துவரின் வழிகாட்டுதல் படி சின்ன மருத்துவரின் வழியில் பயணிப்பார்கள் என்று உறுதியாகிறது.
இந்த நிலை உருவானால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாமக கட்சி இடம் பெறுகிற கூட்டணி மாற்றி அதிகாரத்தை கைப்பற்றுகின்ற அளவுக்கு மிகப் பெரிய அளவில் அரசியல் மாற்றத்தை உருவாக்க கூடும். எந்த கூட்டணியில் பாமக கட்சி என்பதை ஆருடம் கூற வேண்டிய அவசியம் ஏற்படாது. இருவரும் சேர்ந்து ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்குவார்கள் என்பது நிஜம் என்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள்.
காத்திருப்போம் காலம் கனியட்டும்!
- டெல்லிகுருஜி