தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்க வேண்டும்
ராமதாஸ் வலியுறுத்தல்:தமிழ்நாட்டில் வேளாண் கருவிகளை அரசே அதன் செலவில் கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை வாடகைக்கு கொடுப்பதற்காக தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் இப்போதைய வடிவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டியரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.