அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்… ஏலியன்ஸுடன் சிவகார்த்திகேயன்
கொடுத்த அப்டேட்



சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் தீபாவளி ரிலீஸில் இருந்து பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள அயலானுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதனையடுத்து ரசிகர்களை கூல் செய்வதற்காக அயலான் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, அயலான் டீசர் அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. KJR ஸ்டூடியோஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த அப்டேட்டில், அயலான் ஸ்பெஷல் போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. அதில், அயலான் டீசருக்கு ஏஆர் ரஹ்மான் மியூசிக் கம்போஸ் பண்ண, அவருக்கு அருகில் சிவகார்த்திகேயனும் இயக்குநர் ரவிக்குமாரும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

முக்கியமாக இந்த போட்டோவில் ஏஆர் ரஹ்மான் பக்கத்தில் ஏலியன்ஸ் பொம்மையும் இருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அயலான் டீசருக்கு எங்களது ஏலியன்ஸ் அப்ரூவ் கொடுத்துவிட்டது என இந்த போஸ்டரில் கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அயலான் டீசர் ரிலீஸ் தேதி அப்டேட்டால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.