விமான நிலைய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்



சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். பிரதமரை வரவேற்க அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் பா.ஜ.க. சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்களின் அருகே திரண்டனர்.