தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1-ந்தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 633 தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.