திருச்செந்தூர் கோவிலில்
சண்முகார்ச்சனை செய்ய 
ரூ.5 ஆயிரம் கட்டணம்:



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகார்ச்சனை நடத்த ரூ. 1500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அமலுக்கு வந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில் மூலம் சண்முகார்ச்சனை நடத்த கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ. 1500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ. 5 ஆயிரம் என உயர்வு செய்ய சட்டவிதிகளின்படி அறிவிப்பு வெளியிடபட்டது. இது குறித்து ஆட்சேபனை ஏதும் வரப் பெறாத நிலையில், கோவில் அறங்காவலர் குழு சுற்று தீர்மானம்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டு உள்ளது. அதன்படி கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ. 1500-ல் இருந்து ரூ. 5 ஆயிரம் என உயர்த்தப்பட்டது. இந்த கட்டணம் (திங்கட்கிழமை) முதல் கோவில் நிர்வாகத்தால் நடை முறைப்படுத்தப்பட்டது.