முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துசென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்"என பதிவிட்டுள்ளார். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.