இடைத்தேர்தல் முடிவு…!
இடியாப்ப சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..!
ஈரோடு கிழக்கு மாவட்ட இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் ஏன் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்காமல் திண்டாடி வருகிறார். ஆலோசனை என்ற பெயரில் ஏழுமணி நேரம் எட்டுமணி நேரம் கலந்து ஆலோசனை நடத்துவதும் தொடர்ந்து ஆலோசித்து வருவதும் அதிமுகவினர் இடத்தில் குழப்பதையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஒருபுறம் தோழமை கட்சியான பாஜக கட்சியின் நெருக்கடி ஒருபுறம் வேட்பாளரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியிடுவது மேலும் பல சங்கடத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுத்துகிறது. இதனால் சில தோழமை கட்சிகளும் பாஜக கட்சியை காரணம் காட்டி நேரடியாக அதிமுகவை ஆதரிக்க மனமில்லாமல் கூட்டணியில் தொடர்கிறோம். அதே நேரம் பாஜக கட்சி எடுக்கும் முடிவின்படி எங்கள் முடிவு இருக்கும் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ஜான்பாண்டியன் போன்றவர்கள் அறிவித்திருப்பதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான் கூறிக்கொள்ளும் ஒ.பன்னீர்செல்வம் பாஜக கட்சி போட்டியிட்டால் அவர்களுக்கு எங்கள் ஆதரவு என்று கூறுவதும் பொதுவேட்பாளரை நிறுத்தினால் பாஜக வை ஆதரிப்பதற்கு அமமக முன்னேற்ற கழகமும் தயார் என்று டிடிவி தினகரன் கூறுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெறுத்த பின்னடைவை தோற்றுவித்துள்ளது. இதனால் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தாரே தவிர வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. யாரை நிறுத்துவது என்ற குழப்பமான சூழ்நிலையில் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் முகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது என்றே கூறலாம்.
திமுக காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதற்கும் முன்பாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கியதோடு முக்கிய அமைச்சர்களுக்கு தேர்தல் பணி பொறுப்பை வழங்கியதோடு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வேகமாக செய்து வருவது எடப்பாடி அணியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? அல்லது சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டுமா என்ற தெளிவற்ற நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு நெருக்கடியான கட்டத்தில் சூழ்ந்து இருக்கிறார். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் முடிவை அறிவித்தால் அன்றி எடப்பாடியின் முகத்தில் தெளிவு பிறக்காது. அதே நேரம் தேர்தலில் வெற்றி கிடைக்குமா? அல்லது வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டி வருமா? என்ற ஊசலாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
-டெல்லிகுருஜி