ஈரோடு இடைத்தேர்தல்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிரடி திட்டம்…!



ஈரோடு கிழக்கு மாவட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றிப்பெற செய்தால் மட்டும் போதாது. அதே நேரம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும். மேலும் எதிர்த்து போட்டியிடும் கட்சிகள் டெபாசிட் தொகையை இழக்க வேண்டும் என்ற அளவில் தேர்தல் பணியை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று எந்த வழிகளிலும் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு விடக் கூடாது என்றும் உடன்பிறப்புகளை உற்சாக நிலையிலேயே வைத்துக் கொண்டு தேர்தல் முடியும் வரை தேவையான வசதிகளை செய்து தருவதோடு கடுமையாக தினசரி தங்கள் கொடுக்கப்பட்ட பகுதிகளில் நின்று பணியாற்ற வேண்டும் என்றும் திமுக கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் பங்கேற்பதோடு முக்கிய அமைச்சர்களும் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


-டெல்லிகுருஜி