தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்:
அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஜே.இ.இ தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து விலக்கு தேவை என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர். ஜே.இ.இ நுழைவு தேர்வானது தேசிய தேர்வு முகாமை மூலம் நடத்தப்படுகிறது. 10 வகுப்பு மதிப்பெண் பதிவிடுவது குறித்து தேர்வானது தேசிய தேர்வு முகாமை கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாதத்தில் ஜே.இ.இ நுழைவு தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு மதிப்பெண் அவசியமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தேர்ச்சி வழங்கப்பட்ட மாணவர்கள் மாணவர்கள் தற்போது 12-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். 10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டதால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிட்டு வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக அந்த மாணவர்கள் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகாமையை தொடர்பு கொள்ள தமிழக தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் மூலமாக தேசிய தேர்வு முகாமைக்கு தமிழக தமிழக மாணவர்களுக்கு 10-ம் தேர்வு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை வைக்க உள்ளது.