வருகிற 24-ந் தேதி தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள்-உறுப்பினர்கள் கூட்டம்சென்னை: தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி சனிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.