இந்தியாவில் மிக நீளமான ரெயில்வே சுரங்கப்பாதை தயார்



புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 12.8 கி.மீ. தொலைவுள்ள சுரங்கப்பாதை பணிகளை இந்திய ரெயில்வே வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. உதம்பூர் ஸ்ரீநகர் பாராமுல்லா ரெயில் இணைப்பின் ( யூ.எஸ்.பி.ஆர்.எல்) 111 கி.மீ. கட்டுமானத்தில் உள்ள பனிஹால்-கத்ரா பிரிவில் இந்த பாதை அமைந்துள்ளது. அவசர காலங்களில் மீட்பு பணியை எளி தாக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இமயமலையின் ராம்பன் உருவாக்கம் பகுதி வழியாக செல்கிறது. இது தவிர கோடா, ஹிங்கினி, குந்தன்நல்லா போன்ற செனாப் நதியின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடிகால்களும் இந்த பாதையை கடந்து செல்கிறது.

சவாலாக அமைந்த இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிஹால்-கத்ரா வழித்தடத்தில் இது 4-வது சுரங்கப்பாதை ஆகும். இந்த ஆண்டு ஜனவரியில் டி-49 எனப்படும் 12.75 கி.மீ. சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டது. சுரங்கப்பாதை டி-49 என்பது இரட்டை குழாய் சுரங்கப்பாதை ஆகும். இது முக்கிய சுரங்கப்பாதை மற்றும் தப்பிக்கும் வகையில் 33 குறுக்கு வழிகளுடன் இணைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஆகும். யூ.எஸ்.பி.ஆர்.எல். திட்டத்தின் ஒரு பகுதியாக பனிஹால்-கத்ரா பிரிவு கட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 272 கி.மீ. திட்டத்தில் 161 கி.மீட்டருக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து விட்டது.