நயன்தாரா திரைப்படத்தின்
புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு



'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. கோல்டு 'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.