தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது- கவர்னர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி மனு



சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது தி.மு.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய 10 பக்க மனுவை கவர்னரிடம், எடப்பாடி பழனிசாமி அளித்தார். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில்தான் கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்துள்ளார். தி.மு.க. அரசு மீது பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.