நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை… 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புபுதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த உத்தரவு நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்தது. இதன்மூலம் ராஜீவ் கொலை வழக்கில் அவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் தீர்மானங்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு ஒரு ஆதாரம் என்று கூறியுள்ளார். 'வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நடத்திய வலிமையான சட்டப்பேராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி' என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.