காங்கிரஸ் தலைவர் தேர்தல்
டெல்லியில் வாக்களித்தார் சோனியா காந்தி




புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வாக்களிக்கின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே (வயது 80), சசி தரூர் (வயது 66) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.