ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கவர்னர் முயற்சிக்கிறார்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் தொடர்ந்து மாநில அரசுக்கு விரோதமாக ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார். கரூரில் சட்டத்திற்கு விரோதமான மணல் குவாரிகள் மற்றும் கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும் கல்குவாரி மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது. கல்குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்தாருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.


அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனை என்பது நியாயமானது. அதில் அவர்கள் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.