புதுவையில் புரட்சி சபாஷ் முதல்வர் ரங்கசாமி…!அரசின் சலுகைகளை தேவையானவர்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தேடிப் பார்த்து அறிவித்துள்ளார் என்பதற்கு அடையாளமாக அறிவித்துள்ள திட்டம் தான் அரசின் எந்த உதவி தொகையும் பெறாத சுபு வயது முதல் 57 வயதிற்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிக்கும் தலா ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என்ற அற்புதமான திட்டம். குடும்பத்தை பெண்கள் தான் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை வீணடிக்காமல் பெண்கள் கண்ணீரை துடைக்கும் திட்டமாகவே எத்தனையோ திட்டங்களை அறிவித்தாலும் இந்த ரூ.1000 திட்டம் பல பெண்களின் கண்ணீரை துடைப்பதற்கு பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என்பது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ள திட்டமாகும். புதுச்சேரி என்றாலே ஏதோ ஒன்று நினைவுக்கு வந்த காலம் போய் (மது) மாதாந்தோறும் ரூ.1000 என்ற திட்டம் எதிர்காலத்தில் வரலாற்றில் இடம் பெறும் என்பது உறுதி.