சிறந்த கல்வி நிறுவனமாக
சென்னை ஐ.ஐ.டி முதலிடம்சென்னை: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. கல்லூரிகளின் கட்டமைப்பு, செயல்பாடு, ஊக்குவிக்கும் திறன், கல்வி கற்பித்தல் முறை பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள அரசு மாநில தன்னாட்சி கல்லூரி 3-வது இடத்திலும், 4-வது இடத்தில் லயோலா கல்லூரியும் இடம் பெற்றுள்ளன. கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி 6-வது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தர வரிசை பட்டியலில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி, கான்பூர், கொல்கத்தா, ஐ.ஐ.டி. அடுத்தத்த இடங்களை பிடித்த