கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம்..! கற்றுத்தரும் பாடம் என்ன? மாணவிகள் கொலை தொடர்கதையாகும் நிகழ்ச்சி…!
யார் பொறுப்பேற்பு..!
பெற்றோர்களின் புலம்பல்களுக்கு
அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?




கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு இறந்து இரண்டு நாள் கழித்து தான் பள்ளியில் என்ன நடந்தது என்ற செய்தி வெளியாகி உள்ளது என்றால் இதற்கு என்ன காரணம்.

அந்த பள்ளியில் இதுவரை ஸ்ரீமதியோடு சேர்த்து 7 பிள்ளைகள் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஆளாகி இருப்பதாக சுற்றுவட்டாரத்தில் தகவல்கள் பேசப்படுகிறது. இதுவரை அந்த பள்ளி மீது ஆட்சியில் இருந்தவர்கள் எந்தவித உரிய நடவடிக்கையும், ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதுமட்டுமல்ல தொடர்ந்து தமிழகத்தில் குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களாலும், பள்ளியின் உரிமையாளர்களாலும், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை தரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. அத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கெல்லாம் ஒரே நிவாரணம் குற்றவாளிகளை கைது செய்து கோட்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பது என்ற செய்திகள் ஊடகங்கள் மூலம் பேசப்படுகிறது.

இப்படி பார்த்தால் பதினைந்து நாட்களில் 30 போக்சோ வழக்குகள் போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதுவரை பல பெற்றோர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அவமானத்தை பலர் மூடி மறைத்து பசுத்தோல் போர்த்திய காமகொடூரர்களை காப்பாற்றிய ஒரு சிலர் தாய்மார்கள் மற்றும் மாணவிகள் துணிந்து பிரச்சனையை பொதுமக்கள் மத்தியில் கொண்டு வந்து அதற்கு தீர்வுகாண வேண்டும் என்று துணிந்து தங்களுக்கு ஏற்பட்ட அநீதியும் அவமானங்களையும் வெளிப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் கடந்த 6 மாதங்களில் கணக்கீட்டு பார்த்தால் சு804 நபர் மீது போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவை தவிர செல்போன் மூலம் காதல் வலை வீசப்பட்டு பேஸ்புக், டிவிட்டர் கணக்குகளினால் பல பெண்கள் சீரழிந்து தங்கள் வாழ்க்கையை காமகொடூரர்களின் பேராசைக்கு பலிகொடுத்து இருக்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் தெருவில் விளையாடும் பொழுது, வீட்டில் தனியாக இருக்கும் பொழுது, பள்ளிக்கு சென்ற பொழுது, டியூசனுக்கு போகும் பொழுது, பள்ளியில் படித்து கொண்டிருக்கும் பொழுது, சிறப்பு வகுப்பு என்று ஆசிரியரின் வார்த்தையை நம்பி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகள், சிறுவர்கள் மீது ஆயிரக்கணக்கான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது என்று பத்திரிகை செய்திகள் மூலம் தெரியவருகிறது. நாள் ஒன்றுக்கு பதினைந்து வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில் பெரும்பாலான குற்றங்கள் பள்ளி மாணவிகள் மீது குறிவைத்து நடந்துள்ளன.

தமிழ்நாடு சமூக நலத்துறை தரவுகளின் படி பதிவான போக்சோ வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகின்றன. கடந்த திமுக ஆட்சி பதவியேற்ற பொழுது கடந்த ஆறு மாதங்களில் சு804 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. இவற்றை தடுப்பதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் கூர்ந்து கவனித்து உரிய நடவடிக்கையை காவல்துறையினருடன் இணைந்து எடுக்க தவறினால் தமிழ்நாடு ஒரு மிகப் பெரிய அச்சத்தை பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுவது தற்போதைய திமுக ஆட்சியில் மட்டும் அல்லாமல் கடந்த கால அதிமுக ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள், நிகழ்வுகள் ஒரு தொடர்கதையாக இருந்து வந்துள்ளது என்பதையும், புள்ளி விவரங்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

ஆட்சி எதுவாக இருந்தாலும் எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை வழிநடத்தி செல்பவர்கள் அமைச்சர்கள் மட்டுமல்ல அறுபது ஆண்டுகாலம் பதவியில் இருக்க கூடிய அதிகாரிகள் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டாக வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆட்சிகள் நடைபெறும் பொழுதெல்லாம் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் பணியில் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே போல் காவல்துறை அதிகாரிகளும் பதவியில் இருந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் சிலருக்கு சலுகை காட்டுவதும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு வழக்குகளை திசை மாற்றுவதும், அப்பாவிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் காலதாமதம் செய்வதும் இவற்றிற்கெல்லாம் அதிகார வர்க்கமும் காரணம் ஆகின்றன.

குறிப்பாக கடந்த வாரம் ஒரு பெண்ணை நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சீறிய எழுந்த பண்ருட்டி வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினர் அந்த பெண்ணிற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அந்த குற்றவாளிகளை யாராக இருந்தாலும் எந்த சமுதாயமாக இருந்தாலும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்று வீர முழக்கமிட்டார். அதற்கு நிவாரணம் கிடைப்பதற்கும் அடுத்த நிகழ்வாக கள்ளக்குறிச்சி சம்பவம், நடந்து முடிந்து விட்டது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வை பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் இருந்து பல கிராமங்கள் ஒன்று கூடி அந்த பள்ளியை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது அது மட்டும் அல்ல பள்ளி வாகனம் தீக்கு இரையாகின.

தற்பொழுது இந்த வழக்கு சிபி சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், கலவரத்தை பெரிய அளவிற்கு போராட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் தான் முன்னெடுத்து சென்றார்கள் என்றும் அவர்களை அடையாளம் காண வேண்டும் இது ஒரு நாளில் திட்டமிட்டு நடைபெற்ற சம்பவம் அல்ல என் நீதிபதி கேள்வி மீது கேள்வி எழுப்பி குற்றவாளிகள் யார் என்பது அடையாளம் காண வேண்டும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் அது காவல்துறையே ஏற்றுகொள்பவர்களாக இருந்தால் காவல்துறையின் உளவு பிரிவினரும் இதுநாள் வரையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து வருவதாக ஆளுநரே ஒருமுறை தனது பேச்சில் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டு கட்சிகளும் மாதர்சங்கம் நிர்வாகிகளும், பெண்ணுரிமை பேசுபவர்களும், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு விரைந்து குரல் எழுப்ப தாமாதம் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழகம் அரசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனி கவனம் செலுத்தி தமிழ்நாட்டில் ஊடுருவி உள்ள தீவிரவாதிகளை அடையாளம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவிகளுக்கும், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். கள்ளக்குறிச்சி நிகழ்வில் பள்ளியின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக வழக்கை நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதன் மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவிகளுக்கும், பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் நீதி கிடைத்ததாக அச்சம் நீங்கியதாக கருதப்படும் இல்லையென்றால் மாணவிகள் பள்ளி அனுப்புவதையும் மேல்படிப்புக்கு செல்வதையும், பெற்றோர்கள் மறுபரிசீலரன செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கல்வி அறிவு அற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடக் கூடாது என்பதற்காக சரியான நடவடிக்கை மிக மிக அவசியம் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

- டெல்லிகுருஜி