பிரதமர் நரேந்திர மோடி வரும்
28-ம் தேதி சென்னை வருகைமாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேரு விளையாட்டரங்கில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொள்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்கள் பங்கேற்கின்

Popular posts